உலகிலே மனிதர்கள் பல விதம் , அதில் ஒரு விதம் தான் இந்த வால் பிடிகள், யாரவது ஒரு பிரபலமானவரோ அல்லது தான் ஒரு பிரபலவாதி போல் தன்னை சமூகத்தின் முன் பாவனை செய்பவருக்கு வால் பிடிப்பதன் மூலம் தாங்கள் எதையோ சாதித்தது போல் பிதட்டிக் கொள்கிறார்கள் ஒரு சில வால் பிடிகள், பொது நிகழ்வுகளாக இருக்கட்டும், சமூக வலையமைப்புகாளாக இருக்கட்டும், ஏன் பினாமி அரசியல் மேடைகளாக இருக்கட்டும் இந்த வால் பிடிகளின் கைங்கரியங்களுக்கு ஒரு அளவே இல்லை.
இங்கு குறிப்பாக சொல்ல போனால் நாய் வால்களை திருத்தவே முடியாது, தங்கள் வால் பிடிப்பது போதாதென்று அதை Facebook, twitter போன்றவற்றில் like போட்டும், comment பண்ணியும் மற்றவங்களை கடுப்பாக்கிடுவாங்க. நல்லதோ, கெட்டதோ தங்களது பினாமி பிரபலவாதிகள் போட்டா காணும் அதுக்கு உடனே likeபண்றதும் பத்தாம, super, நல்லாருக்கு என்று அடிப்பாங்க 1008 comments. தங்களுக்கேன்றொரு தனித்துவம் இல்லாதவர் களாலும் தங்களுகேன்றொரு இலட்சிய நோக்கிலாத வால் பிடிகளாலும் தான் ஒரு சிலர் தம்மை தாமே பிரபல வாதிகள் போல் சமுகத்தின் முன் பாவனை செய்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இதுதான் தற்கால தமிழ் கலாசாரம் என்று சொல்லிக்கொன்று, தமிழ் கலாசாரத்தையும் சீரழிப்பது மட்டுமன்றி தமிழ் மக்களின் பணத்தை கோடி, கோடியாக சுருட்டும் தமிழ் சினிமா வளர்ச்சி அடைவதற்கும் இத்த வால்பிடிகலே காரணம், இந்த வால் பிடிகளால் உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள் தான் இன்று இந்தியாவை உழல்கள் நிறைந்த நாடக மாற்றி இருக்கின்றது. இலங்கையில் தற்போது 4Gஐ பற்றி பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்தியாவில் 2G பற்றி தான் பேசிகொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களில் மற்றொரு ராகம் தான் இந்த வாளிகள், இதில் கிணத்து வாளிகளை பார்த்தால்: இவர்களை ஒரு வழியல் கூட்டம் என்று கூட கூறலாம். இவர்கள் ஒரு வகை கையால் ஆகாதவர்கள், இவர்கள் கிணத்துக்குள் இருப்பதோ, என்னவோ எதை எடுத்தாலும் ஒரு குறித்த நபரை பற்றியே பிதட்டிக்கொண்டிருப்பார்கள், குறித்த நபர் தான் அவர்களுக்கு உலகம் என்றது பொல திரிவார்கள், இவர்களும் சமூகவலையமைப்புகளில் தங்களது வாளிகலை வால் பிடிகள் போல் வைத்த வண்ணமே இருப்பார்கள்.

6 comments:
ஏன் பாஸ் இந்த கொல வெறி....????
aயார் யாரேல்லாம் வாசிக்கும் போது வந்து போறாங்கப்பா...
டோண்ட டோண்ட டோண்டோடிங் டோண்ட டோண்ட டோண்டோடிங் ... இதுதான் உலகம் பாஸ்.
தொப்பி அளவானவங்க போட்டு கொள்ளுங்க!
ஏதோ ஒன்று அல்லது பல சம்பவங்கள் உங்களை ரொம்பவே பாதித்துள்ளது போல சகோ.. :)
சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.. உங்களது வழமையான சமூகத்தின் மீதுள்ள அக்கறை+கோபத்துடன்
லோஷன் அண்ணா: இவைகள் பொதுவாக சமூகத்தில் நாளாந்தம் ஒவ்வரு தனிப்பட்ட நபரையும் கடுப்பாக்கு கின்ற/ பேசப்படுகின்ற விடையங்கலே!
Post a Comment