Saturday, 11 June 2011

அஷ்வினின் அம்பலங்கள்!

அஷ்வின் என்ற பெயரை கேள்விப்படாதவர்கள் இருக்கேவே முடியாது, அதே போல் அண்மைக்காலமாக இந்த பெயர் பலராலும் பேசப்பட்டு வருவதை யாராலும் மறுக்கவும் முடியாது. அண்மையில் நடந்து முடிந்த உலககிண்ன கிரிக்கெட் மற்றும் IPL என அனைத்திலும் தடம் பதித்த பெயர் இது.  இந்த பெயரானது சென்னை சேப்பாக்கம் (பந்திட்ட மட்டும்) முதல் வெள்ளவத்தை, யாழ்பாணம் பிறவுன் வீதி என அடி வேண்டாத இடமே இல்ல என்று கூட கூறலாம். 

கால ஓட்டத்தின் பலவீனங்களை பயன்படுத்தி அதில் தங்களது மாயயால வித்தைகளை காட்டி வரும் பெயர் தான் இது. குறிப்பாக சொல்லப்போனால் பெண்களிடம் பரவாலக பேசப்படுவது என்பதற்கப்பால் பெண்களிடம் பேச்சு வாங்கிய பெயர் என்று சொன்னால் மிகையாகாது. வீதியில் செல்லும் பெண் பிள்ளைகள் முதல் முகபுத்தகத்தில் இருக்கும் பிள்ளைகள் வரை யாரையும் விட்டதில்லை இந்த பெயர். 

இன்னும் சொல்ல போனால் இந்த பெயரை பயன்படுத்தும் ஒருவர் எதிலும் தலைவராக இருக்க முற்படமாட்டார்கலாம். காரணம் மகளீர் பாடசாலைகளுக்கு தங்களது பிரசன்னத்தை உறுத்திப்படுத்தும் முகமாக ஏதாவது ஒரு அப்பிரின்டிசை தலைவாரக போட்டு விட்டு செயலாளராக இருந்து தங்களது அந்தரங்க கருமங்களை செய்வார்கலாம்.

நீங்கள் நினைப்பது போல இதில் வரும் கசப்பான அலசல்கள் அத்தனையும் இந்திய கிரிக்கெட் அணியின் உடைய சுழல் பந்து வீச்சாளர் அஷ்வினை பற்றி அல்ல, இது ஒரு பினாமி நபரை பற்றிய அலசல் தான். குறிப்பாக சொல்ல போனால் தமிழ் வலைபதிவராக அஸ்வின் என்ற பெயரில் வலம் வரும் ஒரு கற்பனை பாத்திரம் பற்றியதுங்க. 

அஸ்வின், வர்மன் என்றெல்லாம் புனைப்பெயரை தனக்கு தானே சூட்டிக்கொண்டு சமூகத்தின் முன் வலம்வரும் ஒரு வலைபதிவர் தான் இவர். இவர் எங்கு சென்றாலும் சரி, எதை எடுத்தாலும் சரி ஏன் தனது நியபெயரை பாவிகாமல் ஒரு புனைப் பெயரில் வலம் வருகின்றார் என பல நண்பர்கள் கேள்வி எழுப்பிய வண்ணமே இருக்கிறார்கள்? 

நீங்க நினைக்கலாம் இவருக்கு அரசியலில் எதிரிகள் நிறைய இருப்தோ என்னவோ என்று, அனால் உண்மை அதுவல்ல, நம்ம 2007 வெள்ளவத்தை வெட்டி சங்க தலைவர் கண்ணா சிவகணேசன் தலைமையில், மொக்கை பதிவர் மைந்தன் சிவாவின் ஆலோசனைக்கமைய வெட்டி குழுவொன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் வெளியிடப்பட்ட கண்ணாவின் சாமியார் வாழ்வு என்ற அறிக்கை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும்: அஸ்வின் என்ற பெயரில் 1988ம் ஆண்டில் எந்த ஒரு பிறப்பு பதிவும் இல்லை இன்றும், இது 2007களின் இறுதியில் வெட்டிதனம் காரனமாக பெண் பிள்ளைகளுக்கு ஏய்ப்பு விடுவதை தூர நோக்காக கொண்டு உருவெடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. 

மேலும் இந்த பெயரில் கணக்கில்லாத சமூகவலை அமைப்பே இல்லை என்பதுடன், மொரட்டுவ பல்கலைக்கழக வட்டகற்களில் ( சம கட்டு / ஒரு பாதுகாப்பான இருப்பிடம்) அந்தி சாயும் வேளைகளில் இவர் யார் யாருக்காகவோ காத்த வண்ணம் இருப்பதை கேட்டு, என்னமோ எதோ தெரியவில்லை மொரட்டுவ பல்கலைக்கழக நண்பர்கள் பலரும் அழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகின்றது.  

இவ்வாறானதொரு புலணாய்வு நடப்பதை கேள்வி உற்ற நம்ம அனுதிணன், விரிவுரைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கொழும்பு பல்கலை வளாகத்தினுள் இருப்பதை தவிர்த்து காலா காலத்திற்கு விட்டில் பிரசன்னமாகி விடுவதாகவும் செய்திகள் தெருவிக்கின்றன. 

எது எவ்வாறு இருப்பினும், அஷ்வினின் அம்பலங்கள் தொடர்பாக மேலும் தெரிந்தவர்கள் கீழே பின்நூட்டுமாறு வேண்டபடுவதுடன்,வெள்ளவத்தை வெட்டி சங்க ஆய்வில் அடுத்து மைந்தன் சிவா சிக்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

குறிப்பு: அஸ்வினின் கட்டளை தள சுட்டி: அஷ்வின் அரங்கம்

10 comments:

டி.சாய் said...

ஒன்றுமே புரியவில்லையே :)
இது புனைவா?? நிஜமா??

நிருஜன் said...

நியம் பாதி புனைவு பாதி இரண்டும் கலந்த கலவை இது!

மைந்தன் சிவா said...

ஏலே என்னைய பத்தி என்னாலே??ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்
சந்தி சிரிக்குமோ??ஹிஹி நாம கவலைப்பட மாட்டோமே ஹிஹி

Ashwin-WIN said...

ஏலே எனக்கு எதிரி வெளில இல்லடா.. கூடவே ரூம்போட்டு தூங்கிட்டிருக்குது.. அவ்...

Anuthinan S said...

அப்ப இது கிரிக்கெட் அஸ்வின் இல்லையா???

Mohamed Faaique said...

////ஏலே எனக்கு எதிரி வெளில இல்லடா.. கூடவே ரூம்போட்டு தூங்கிட்டிருக்குது.. அவ்... //

என்ன கொடுமை சார்..(20034 முறையாக...)

யோ வொய்ஸ் (யோகா) said...

இப்படி போகுதா கதை?

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

செம காமடி :D

நிரூபன் said...

ஒரு பச்சப் புள்ளைய இப்படியா போட்டுத் தாளிக்கிறது?
ரசித்தேன் உங்களின் அறுவையை.

வடலியூரான் said...

அவரா இவருரு... ஆத்தாடி,..

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...