Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Thursday, 10 February 2011

விஷமிகளின் அரங்காகும் FACEBOOK?

தற்கால தகவல் தொழில் நுட்பயுகமானது பல்வேறுபட்ட வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும், மறு முனையில் அது பல்வேறுபட்ட எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக இதன் எதிர் விளைவுகள் வளர்த்து வரும் பாடசாலை மாணவர் முதல் பல்கலை கழக மாணவர் வரை பரந்திருக்கின்றது.  இதற்கு அதிகரித்துவரும் சமூக வலையமைப்புக்கலான facebook  மற்றும் twitter போன்ற இதர வலையமைப்புகளின் பாவனையே அடித்தளம் இடுகின்றது .

facebook. twitter  போன்றவற்றின் பயன்பாடுகளை அறியாத இளம் சமுகம், இவற்றை ஒரு வகை கீழ்த்தனமான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஒரு அநாமதேய கணக்கை திறத்து அதில் தனக்கு வேண்டபடாத ஒருவரைப்பற்றியோ, ஒரு சமுகத்தை பற்றியோ சமூக அங்கீகார மற்ற முறையில் எதையாவது வெளிப்படுத்தி விட்டு தான் ஓர் சைபர் வார் செய்து உலக சாதனை படைத்தவர் போல் பாவை செய்வது ஒரு நகைசுவைகுரிய விடயம். 

facebook போன்ற இதர சமுக வலையமைப்புக்கள் ஆனவை தனிபட்ட நபர்கள் மற்றும் சமூகங்களின் நீண்டகால நீரோட்டத்தில் நிகழும் கருத்துக்கையும், தங்கள் நாளாந்த வாழ்க்கையில் இடம் பெறுகின்ற நகைசுவை மிகு ஆக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமே தவிர, ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ கலங்க படுத்துவதற்கான இடங்கள் அல்ல இவைகள்,.

 இவாறான கைங்கரியங்கள் ஆனவை தற்போது ஒரு சில பல்கலை கழக மாணவர்களிடம் ஊடுறுத்திருப்பது ஓட்டு மொத்த பல்கலைக்கழக மாணவர்களையும் ஒரு சாக்கடைக்குள் இழுத்து  செல்லும் செயற்பாடாகும். இதற்கு அண்மையில் மைந்தனால் வெளியிடப்பட்ட "பல்கலைக்கழக மாணவி மீது பேஸ்புக் சைபர் கிரைம்" என்ற தலைப்பிலான ஆக்கம்  நல்லதொரு உதாரணம். இது எதிகாலத்தில் தனிப்பட்ட நபர்களின் வாழ்கையை கூட சீரழிக்க வல்லது.

மைந்தன் வெளிபடுத்திய நிகழ்வில் தொடர்புபடும் அந்த அநாமதேய நபரானவர், குறித்த பல்கலை கழகத்தை சேர்ந்த ஒருவராக இருப்பதுடன், அவர் ஒரு ஆங்கில அறிவில்லாத நபர் போல் தன்னை பாவனை செய்வதோடு, தனது மொழி நடையை வெளிப்படுத்த முடியாது, கொச்ச தமிழிலே தனது விசம தனமான கருத்துகளை வெளிப்பட்டுத்தி வருகிறார். குறித்த நபரானவர் நிச்சயமாக சகோதரத்துவம் அறியாத ஒரு மன நோயாளி என்பது நிச்சயம். இவர் காதலால் விரக்தி அடைத்த நபராக இருப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. அவர் மற்றவர்கள் தன்னை இனம் கண்டு கொள்ள முடியாதிருக்க,குழப்பமிகு வசனங்களை அவர் அங்கு பயன்படுத்தி இருக்கிறார்.

முன்பு பல்கலை கழகங்களில் பகிடிவதை என்ற கொடிய நோய்க்கு பயந்த காலம் போய், இப்போது இவ்வாறான விசம தனமான செயற்பாடுகளுக்கு அஞ்சும் நிலை உருவேடுத்துள்ளது. இது குறிப்பாக மாணவிகள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கி உள்ளது. இவ்வாறன செயற்பாடுகள் குறித்த பல்கலைகழகத்தின் பெயருக்கு பங்கம் விளைவிப்பது மட்டுமல்லாது, குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஏனைய மாணவர்களது  செயற்பாடுகளுக்கும் கரும் புள்ளி வைக்கும் ஒரு நாசகார வேலையாகும்!

 இந்த நாசகாரி தான் அனைத்தையும் பாதுகாப்பான முறையில் செய்வதாக என்னலாம் ஆனால் அவரால் குறித்த அநாமதேய கணக்கின் infoவை மட்டும் தான் மறைக்க முடிந்துள்ளமை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புலன் ஆய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இங்கு சில தடயங்களையும் அவருக்கு தெரியாமல் (தகவல் பாது காப்பு தொடப்பன அறிவு விசமிக்கு இல்லை என்பது உறுதி) விட்டு சென்றிருக்கின்றார். இந்த தடயங்களை புலனாய்வு செய்யும் பணியை நண்பர்கள் சிலர் முடுக்கி விட்டிருக்கிறார்கள். இவர் பயன்படுத்தும் இணையவசதியினது IP Address, Host Name, ISP என்பன இனம் கானப்படுள்ளன. இன்னும் சில இது தொடர்பான தகவல்கள் பெறப்படும் இடத்து குறித்த விசமி உறுதி செய்யப்படுவார். 

இத்த நாசகாரியை இனம் காணும் படலம் தற்போது ஒரு வட்டத்திற்குள் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த நாசகார நபரின் செயட்பாடுகலால் பாதிப்புற்ற மாணவர்களில் ஒருவர் சட்ட உதவியை நாடும் இடத்து, கணணியின் பிழையான பயன்பாடு சட்ட வரைவுகளுக்கமைய இவ்வாறான நாசகரமான செயகல்கள் கொலை குற்றங்களுக்கு நிகராக மதிக்கப்படும். அத்தோடு குறித்த விசமி தனது பல்கலை கழக கல்வியை துறக்க நேரிடுவதுடன் அவரது எதிகால தொழில் வாய்ப்புக்கள் பாதிப்புறும். இவ்வாறன விசமிகள் இருக்கும் வரை தமிழ் சமுகம் எவ்வாறு வளம்பெறும் ?

இவாறான அநாமதேய facebook கணக்குகளில் சித்தரிக்கப்படும் சமூக அங்கீகார மற்ற செயல்களை கண்டும் காணாதது போல் இருக்காது, இவ்வாறான அண்ணாமதேய கணக்குகள் தொடர்பாக facebookல் காணப்படும் report என்ற option மூலம் இவ்வாறான செயல்களை ஒழித்து கட்டுவதன் ஊடாக facebookஐ ஒரு ஆரோக்கியமான சமூக வலையமைப்பாக தமிழ் சமூகத்தின் மத்தியில் முட்கொணர முடியும்.


Wednesday, 15 December 2010

FACEBOOK ன் இணை ஸ்தாபகர் MARK ZUCKERBERG "TIME's 2010" ஆக தெரிவு

 FACEBOOKன் இணை ஸ்தாபகரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Mark Zuckerberg  இவ்வாண்டிட்கன TIME சஞ்சிகையின் உடைய நபராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். (TIME's 2010 Person of the Year 2010)
2010ம் ஆண்டிற்கான பிரபல நபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசேஞ்சே முதலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையிலேயே, அனைவரினது எதிர்ப்பார்ப்பினையும் முறியடித்து ஷூக்கர்பேர்க்கினை டைம் தெரிவு செய்துள்ளது என டைம் சஞ்சிகையினுடைய பிரதம ஆசிரியர் Rick Stengel இந்த அறிவித்தலை  இன்று (15.12.2010) வெளியிட்டுள்ளார். இத் தெரிவானது வெறும் வாக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாது பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது.
    26 வயதான  ஷூக்கர் பேர்க் உலகிலே அரை பில்லியன்க்கு மேற்பட்டோரை ஒரு சமுக வலையமைப்பின்  மூலம் ஒன்றினைதிருக்கின்ற பெருமைக் குரியவர். இந்த சமூக வலையமைப்பானது உலகிலே பல மாற்றங்களுக்கும் பல வலையமைப்பு விருத்திகளுக்கும் ஒரு அடித்தளமாக மாறி இருக்கின்றது , அதற்கு அப்பால் இது வர்த்தகதுறையிலே ஒரு ஊடகமாகவும், மக்களது சிந்தனையாற்றல்கள் மற்றும் வெளிப்பாடுகளை,   தகவல் புரட்சியூட அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி இட்டு செல்வதற்க்காண ஒரு தகவல் மையமாக அமைந்திருக்கின்றது.
இதற்கு முன்னர் 1952ம் ஆண்டு Elizabeth மகராணி மிக குறைந்த வயதில் (26 வயது ) இந்த விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சாமாகும்.

Sunday, 12 December 2010

Wikileaksம் அரங்கேறும் நாடகங்களும்

உலகிலே இடம் பெற்று வருகின்ற ஆராயகங்கள்  மற்றும் திரைக்கு பின்னான  இராயாங்க இரகசியங்களை தங்களது திறமையை பயன்படுத்தி வலையமைப்புகளை கொள்ளை இடுதல் மற்றும் இதர தகவல் கசிவுகள்   மூலம் உலகிற்கு எடுத்து வியம்புகின்ற இணைய தளம் தான் விக்கிலீக்ஸ்.(www.wikileaks.org) இவர்கள் 2006ம் ஆண்டு ஆப்கானிஷ்தானுக்கு எதிராக அமெரிக்க போர் தொடுத்ததன் பின்னணியில் தொடர்புபட்டிருக்கும் இருக்கும் ஆவணங்கள் முதல் அனைத்துலக நாடுகளில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் திரைக்கு பின்னான அரசியலை எடுத்தியம்பி வருகின்றனர். இது இவ்வாறிருக்க சர்வதேச குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த Australia பிரயையான  அதன் நிறுவுனர் Michel Assange கடந்த 07 திகதி லண்டன்மா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் கைதை தொடர்ந்து பல நாடகங்கள் அரங்கேறிய  வண்ணமுள்ளன  ஆறுமாதங்களுக்கு முன்னர் சீனா விக்கிலீக்ஸ்சை தடை செய்ததை தொடர்ந்து தற்போது விக்கிலீக்ஸ்ன் வெளிஜிடுகளால் பாதிப்புற்ற பல உலக வல்லரசுகளான அமெரிக்க, ஐக்கிய ராட்சியம், ஸ்வீடன் உட்பட இதர நாடுகள் அதனை தடை செய்தவண்ணமுள்ளன.
 "சோமியன் குடும்மி சும்மாவா ஆடும்", உலக வல்லரசுகளுக்கு வாழ் பிடிக்கும் நோக்கோடும் விக்கிலீக்ஸ் செயற்பாடுகளை ஸ்தம்பிதம்  அடைய செய்யும் பொருட்டும், விக்கிலீக்ஸ்ன் வங்கி கணக்கை பராமரித்து வந்த swesh bank அதன் கணக்குகளை மூடியதுடன் வங்கி நிலுவைளையும் முடக்கியது. 
விக்கிலீக்ஸ் ஆனது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. இதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி மூலங்கள் அனைத்தும் நன்கொடை மூலம் பெறபட்டு வந்தன, இவை அனைத்தும் மேற்குறித்த வங்கி கணக்கு மூலமே பராமரிக்க பட்டுவந்தமை குறிப்பிடதக்கது .
 இதேவேளை ஒருந்தன் ஆடுற மாதிரி நாமளும் ஆடுவம், ஒருந்தன் எப்ப ஆடுவான் என்டு பாத்திட்டிருந்த கூட்டங்கள் சில தாமும் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையில், உலகில பிரபலமாக இருக்கின்ற தேடுதல் தளங்களான கூகிள் மற்றும் யாஹூ என்பன தங்களும் விக்கிலீக்ஸ்ன் தேடுதல் இணைப்புகளை தடை செய்தன. 
அது மட்டுமா ?  உலகில அதிகளவான தகவல்களை   சேமிக்க கூடிய வகையில் பல இயங்குதளங்களோடு இயங்கி கொண்டிருக்கும் இணையதள இட (hosting) வழங்குனரும் விக்கிலீக்ஸ் இணைய தளத்திற்கு இடமைப்பு வழங்கியதுமான  அமேசன் தான் வழங்கிய இட பரப்பை முட்டக்கி கொண்டது, விக்கிலீக்ஸ் தற்போது www.wikileaks.ch எனும் முகவரியில் இயங்கி கொண்டிருகின்றது .














இதன் பிரதிபலிப்பாக assange சகபாடிகள் ஆன்மாதேய (Anonymous) நபர்கள் என்ற பெயரில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வருசையில் amezen.com  இணைய செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தும் வகையில் 3 மணி நேரம் அதனை ஆனாமதேய நபர்கள் தம் கட்டுப்பாட்டின் கீழ் முடக்கி வைத்திருந்தனர்.
இதேவேளை உலகின் ஆன்லைன் பணபரிமாற்ற தளங்களான paypal உள்ளிட்டவை விக்கிலீக்ஸ் உடனான கணக்குகளை செயல் இழக்க செய்துள்ளனர். மறு முனையிலே சமுக வலையமைப்புகலான facebook மற்றும் twitter என்பன இது தொடர்பாக தாம் எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்க வில்லை என தமது செய்தி குறிப்புகளில் வெளியிட்டுள்ளன, இவை அத்தனையும் உலக வல்லரசுகளின் வழிகாட்டல் அரங்கமே !
  Assange ஆள் வெளியிடும் நோக்கோடு வைத்திருக்கப் பட்டிருந்த முக்கியமான பல தகவல் கோவைகள் இணையதளங்களிலே தனிப்பட்ட பாதுகாப்பு குறியீட்டுடன் (Private Key) பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்பவர்  தனது  மினஞ்சல் முகவரியை பதிவதன் ஊடக தனிப்பட்ட கு
றியீட்டினால் பிரிக்கப்படாத கோவையாக தரவிறக்கம் செய்ய முடியும் அனால் ஆனாமதேய நபர்கள் தனிப்பட்ட குறியீட்டினை வெளியிடும் வரை எவரும் அதன் உள்ளடக்கங்களை பார்வையிட முடியாது. 
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பதற்கமைய Assange விடுவிக்காத பட்சத்தில் அண்ணாமதேய நபர்கள் தாம் இந்த தனிப்பட்ட இரகசிய குரியீட்டினை பதிவு செய்யப்பட்ட மினஞ்சல்களுக்கு வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்!
எது எவ்வாறிருப்பினும் பதிவேற்றப்பட்டுள்ள தனிப்பட்ட இரகசிய குறியீட்டுடன் கூடிய கோவைகள் பிரித்தெடுக்கும் முயற்சியில் மென்பொருள் பொறியியல் ஆளர்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப விற்பனர்கள் இறங்கி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை!


நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...