Sunday, 12 December 2010

Wikileaksம் அரங்கேறும் நாடகங்களும்

உலகிலே இடம் பெற்று வருகின்ற ஆராயகங்கள்  மற்றும் திரைக்கு பின்னான  இராயாங்க இரகசியங்களை தங்களது திறமையை பயன்படுத்தி வலையமைப்புகளை கொள்ளை இடுதல் மற்றும் இதர தகவல் கசிவுகள்   மூலம் உலகிற்கு எடுத்து வியம்புகின்ற இணைய தளம் தான் விக்கிலீக்ஸ்.(www.wikileaks.org) இவர்கள் 2006ம் ஆண்டு ஆப்கானிஷ்தானுக்கு எதிராக அமெரிக்க போர் தொடுத்ததன் பின்னணியில் தொடர்புபட்டிருக்கும் இருக்கும் ஆவணங்கள் முதல் அனைத்துலக நாடுகளில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் திரைக்கு பின்னான அரசியலை எடுத்தியம்பி வருகின்றனர். இது இவ்வாறிருக்க சர்வதேச குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த Australia பிரயையான  அதன் நிறுவுனர் Michel Assange கடந்த 07 திகதி லண்டன்மா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் கைதை தொடர்ந்து பல நாடகங்கள் அரங்கேறிய  வண்ணமுள்ளன  ஆறுமாதங்களுக்கு முன்னர் சீனா விக்கிலீக்ஸ்சை தடை செய்ததை தொடர்ந்து தற்போது விக்கிலீக்ஸ்ன் வெளிஜிடுகளால் பாதிப்புற்ற பல உலக வல்லரசுகளான அமெரிக்க, ஐக்கிய ராட்சியம், ஸ்வீடன் உட்பட இதர நாடுகள் அதனை தடை செய்தவண்ணமுள்ளன.
 "சோமியன் குடும்மி சும்மாவா ஆடும்", உலக வல்லரசுகளுக்கு வாழ் பிடிக்கும் நோக்கோடும் விக்கிலீக்ஸ் செயற்பாடுகளை ஸ்தம்பிதம்  அடைய செய்யும் பொருட்டும், விக்கிலீக்ஸ்ன் வங்கி கணக்கை பராமரித்து வந்த swesh bank அதன் கணக்குகளை மூடியதுடன் வங்கி நிலுவைளையும் முடக்கியது. 
விக்கிலீக்ஸ் ஆனது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. இதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி மூலங்கள் அனைத்தும் நன்கொடை மூலம் பெறபட்டு வந்தன, இவை அனைத்தும் மேற்குறித்த வங்கி கணக்கு மூலமே பராமரிக்க பட்டுவந்தமை குறிப்பிடதக்கது .
 இதேவேளை ஒருந்தன் ஆடுற மாதிரி நாமளும் ஆடுவம், ஒருந்தன் எப்ப ஆடுவான் என்டு பாத்திட்டிருந்த கூட்டங்கள் சில தாமும் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையில், உலகில பிரபலமாக இருக்கின்ற தேடுதல் தளங்களான கூகிள் மற்றும் யாஹூ என்பன தங்களும் விக்கிலீக்ஸ்ன் தேடுதல் இணைப்புகளை தடை செய்தன. 
அது மட்டுமா ?  உலகில அதிகளவான தகவல்களை   சேமிக்க கூடிய வகையில் பல இயங்குதளங்களோடு இயங்கி கொண்டிருக்கும் இணையதள இட (hosting) வழங்குனரும் விக்கிலீக்ஸ் இணைய தளத்திற்கு இடமைப்பு வழங்கியதுமான  அமேசன் தான் வழங்கிய இட பரப்பை முட்டக்கி கொண்டது, விக்கிலீக்ஸ் தற்போது www.wikileaks.ch எனும் முகவரியில் இயங்கி கொண்டிருகின்றது .


இதன் பிரதிபலிப்பாக assange சகபாடிகள் ஆன்மாதேய (Anonymous) நபர்கள் என்ற பெயரில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வருசையில் amezen.com  இணைய செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தும் வகையில் 3 மணி நேரம் அதனை ஆனாமதேய நபர்கள் தம் கட்டுப்பாட்டின் கீழ் முடக்கி வைத்திருந்தனர்.
இதேவேளை உலகின் ஆன்லைன் பணபரிமாற்ற தளங்களான paypal உள்ளிட்டவை விக்கிலீக்ஸ் உடனான கணக்குகளை செயல் இழக்க செய்துள்ளனர். மறு முனையிலே சமுக வலையமைப்புகலான facebook மற்றும் twitter என்பன இது தொடர்பாக தாம் எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்க வில்லை என தமது செய்தி குறிப்புகளில் வெளியிட்டுள்ளன, இவை அத்தனையும் உலக வல்லரசுகளின் வழிகாட்டல் அரங்கமே !
  Assange ஆள் வெளியிடும் நோக்கோடு வைத்திருக்கப் பட்டிருந்த முக்கியமான பல தகவல் கோவைகள் இணையதளங்களிலே தனிப்பட்ட பாதுகாப்பு குறியீட்டுடன் (Private Key) பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்பவர்  தனது  மினஞ்சல் முகவரியை பதிவதன் ஊடக தனிப்பட்ட கு
றியீட்டினால் பிரிக்கப்படாத கோவையாக தரவிறக்கம் செய்ய முடியும் அனால் ஆனாமதேய நபர்கள் தனிப்பட்ட குறியீட்டினை வெளியிடும் வரை எவரும் அதன் உள்ளடக்கங்களை பார்வையிட முடியாது. 
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பதற்கமைய Assange விடுவிக்காத பட்சத்தில் அண்ணாமதேய நபர்கள் தாம் இந்த தனிப்பட்ட இரகசிய குரியீட்டினை பதிவு செய்யப்பட்ட மினஞ்சல்களுக்கு வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்!
எது எவ்வாறிருப்பினும் பதிவேற்றப்பட்டுள்ள தனிப்பட்ட இரகசிய குறியீட்டுடன் கூடிய கோவைகள் பிரித்தெடுக்கும் முயற்சியில் மென்பொருள் பொறியியல் ஆளர்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப விற்பனர்கள் இறங்கி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை!


2 comments:

Ashwin-WIN said...

முதல் பதிவே நல்லதொரு தேடல்.. வாழ்த்துக்கள்..

S.Nirujan said...

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் சற்று முன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ஞேவிற்கு பிணைவழங்க பிரித்தானிய நீதிமன்றம் சற்று முன் அனுமதித்தது

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...