
2010ம் ஆண்டிற்கான பிரபல நபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசேஞ்சே முதலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையிலேயே, அனைவரினது எதிர்ப்பார்ப்பினையும் முறியடித்து ஷூக்கர்பேர்க்கினை டைம் தெரிவு செய்துள்ளது என டைம் சஞ்சிகையினுடைய பிரதம ஆசிரியர் Rick Stengel இந்த அறிவித்தலை இன்று (15.12.2010) வெளியிட்டுள்ளார். இத் தெரிவானது வெறும் வாக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாது பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது.
26 வயதான ஷூக்கர் பேர்க் உலகிலே அரை பில்லியன்க்கு மேற்பட்டோரை ஒரு சமுக வலையமைப்பின் மூலம் ஒன்றினைதிருக்கின்ற பெருமைக் குரியவர். இந்த சமூக வலையமைப்பானது உலகிலே பல மாற்றங்களுக்கும் பல வலையமைப்பு விருத்திகளுக்கும் ஒரு அடித்தளமாக மாறி இருக்கின்றது , அதற்கு அப்பால் இது வர்த்தகதுறையிலே ஒரு ஊடகமாகவும், மக்களது சிந்தனையாற்றல்கள் மற்றும் வெளிப்பாடுகளை, தகவல் புரட்சியூட அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி இட்டு செல்வதற்க்காண ஒரு தகவல் மையமாக அமைந்திருக்கின்றது.
இதற்கு முன்னர் 1952ம் ஆண்டு Elizabeth மகராணி மிக குறைந்த வயதில் (26 வயது ) இந்த விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சாமாகும்.
No comments:
Post a Comment