Saturday, 14 May 2011

#வேலை #வீடு #வீடு + காரி எல்லாம் தேவை தானா?

ஒரு மனுஷன் காலத்தை ஓட்டனும் ஏன்டா எத்தனையோ சவால்களை தாண்ட வேண்டி இருக்கு. இதை எல்லாம் தாண்டினாதான் சமூகத்தில ஒருவனை மனுசனா மதிக்கிறாங்க. ஒரு மனுஷனுக்கு இருக்கின்ற பெரிய சவால்கள் இவைதான்க #வேலை, #வீடு + காரி. (இதில் வரும் பகிவுகள் அத்தனையும் வரலாறு தந்த பாடமே ஒளிய எனது சொந்த அனுபவம் இல்லைங்கோ)

ஒருத்தன் வேலைக்கு பொய் வேலை செய்து களைக்கிறதுக்கு முதல்ல CV அனுப்பியே களைச்சுப்போய்டுவாங்க. அப்புறம் Interview என்ற பெயர்ல போன் பண்ணி களுத்தறுப்பாங்க, அதுக்கு மேலால இதுதான் எங்கட recruitment process எண்டு சொல்லி சொல்லி ஒவ்வரு கம்பனியுமும் பத்து பண்டண்டு interview வைத்து வதைப்பங்க, வதைத்து முடிய கடைசியில சொல்லுவாங்க you are not eligible எண்டு ( எப்பிடி கடுப்பாகும் ).

 இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தனிப்பட்ட செல்வாக்கு கையோங்குமானால் எப்பிடி எல்லாம் பிழை பிடிக்கலாம் எண்டு பாத்திட்டிருப்பாங்க, அதுவும் நீங்க ஒரு தமிழ் மகன் எண்டு தெரிஞ்சிட்டா காணும் சகோதர மொழியில இருக்கிற பாண்டித்தியம் நிறைந்த வசனத்தில எல்லாம் கதைச்சே நம்மல விரட்டுவாங்க, இவை பெரும்பாலும் வங்கிகளில் இடம் பெறுவது வழமை. (இதை சகிக்க முடியாமல் தான் வெளிநாடுகளுக்கு நம்ம உறவுகள் புலம் பெயர்கிறார்கள் போல). வேலை கிடைசிடுச்சே என்னு பெருமூச்சு விட முடியுமா? அதுக்கப்புறமும் #சம்பளம் #பதவியுயர்வு #சலுகைகள் என்னு இருக்கு பல வில்லங்கம் அடுத்தடுத்து. 

அப்புறம் பத்து பதினைந்து வருஷமா உழைச்சாலும் கொழும்பிலையோ அல்லது யாழ்ப்பாணத்திலையோ வீடு வாங்குவது என்பது தற்போது ஒரு இயலாத காரியம். கொள்ளை அடிச்சாலும் வாங்க முயாதஅளவுக்கு யாழ்ப்பாண வீடுகளின் விலை கிடு கிடு வென கோடிகளின் மடங்கில் யுயர்ந்தவண்ணமுள்ளது,  அதுதான் கஷ்டம் எண்டு கொழும்பிலே ஒரு தட்டை வேண்ட முற்பட்டா கள்ள உறுதி கொடுத்து ஏய்ப்பு செய்யும் கூட்டம் இருக்கும் வரை எப்படி முடியும்? அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் சோலை வரி 300/- ஆண்டுக்கு அனா கொழும்பில் அது 12000/- வருடம்.  

தலைகீழாக நின்று வீடு வாங்கினாலும் அந்த விட்டுக்கு ஒரு +காரி என்கிற conceptக்கு வரும் போது தான் ஐயா பெரிய வில்லங்கம் காத்திருக்கும்.  எப்பிடி தான்  #வேலை, #வீடு நல்லதாக அமைந்தாலும் "வீடு + காரி" உரிய பிரமாணங்களை/எதிர் பார்ப்புக்களுடன் ஒத்திருக்காவிட்டால் நம்ம இளைஞர்களது எதிகாலம் பாழும் குழிக்குள் தள்ளப்ப்படுமாம். (இதால தான் பசங்க சிலர் குடியில்(வீடு) இருந்து குடியை நோக்கி நகர்கிறார்களோ) 

அதாவது அப்பா-அம்மா இருக்காங்களே அவங்க  "வீடு + காரிஐ" select பண்ணுவாங்க என்டிருந்தா: அதுக்குள்ள கல்யாண தரகர்கள் மூக்க நுழைத்து (புரோக்கர்) தனது வியாபாரதனத்தை காட்டி பசங்கட வாழ்கைய குட்டி சுவர் ஆக்கிடுவாங்கலாம். கல்யாண தரகர்ட தொல்லையால தாங்களே தங்களது கொள்கைகள், பிரமாணங்கள் மற்றும் எதிபார்ப்புகளுடன் இணைய கூடிய ஒரு "வீடு + காரிஐ" தெரிவு செய்ய முற்படும் பட்சத்தில் தரகரை விட பெரிய வில்லன்கள் இங்க தான் தங்கட ரூபத்தை காட்டுறாங்க.

அதிலையும் பல்கலை கழகங்களில் சொல்லவே தேவை இல்லையாம் இந்த வில்லன் தொழிலை பற்றி:   ஆத்தல் எடுக்கும் கூட்டமும், குள்ளநரி கூட்டமும் இருக்கும் போது அங்கு எப்பிடி தெரிவு செய்ய முடியுமாம்? இவற்றுக்கு கரணம் பெரும்பாலும் 90% பல்கலை கழக அனுமதி பெறுபவர்கள் பாடசாலை காலங்களில் வெறும் புத்தக பூச்சிகாளாக இருந்தவர்கள் தான், இவர்களுக்கு  இணைப்பாட விதான செயற்பாடுகள் என்றால் என்ன வென்றே தெரியாது.  காணாததை கண்ட புத்த பூச்சிகள் தான் குட்டையை குழப்பி விட்டு கடைசியில கருவாட்டுக்கு விலை ஏத்துவாங்க என்கிறார்கள் அனுபவசாலிகள்! (சீனியர் அக்காவுக்கு ரூட்டு போட்டா சோலியில்லையாமே) 

#வேலை, #வீடு,  #வீடு + காரி என்கிற மூன்றும் சிறப்பாக ஒன்றிணையும் பட்சத்தில் ஒருவன் எதை வேண்டும் என்றாலும் சாதிக்க முடியும். அல்லாது போனால் அவனது வாழ்க்கை ஒரு தொங்கு பாலம் போல் ஈடாடும் என்கிறார்கள் அனுபவபட்டவர்கள்.  

"இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல யுவதிகளுக்கும் கூட பொருந்துமாம் " 

2 comments:

Ashwin-WIN said...

நல்லா சொல்லுறியள் எல்லாம் அனுபவம்தானோ...?

நிருஜன் said...

இதில் வரும் பகிவுகள் அத்தனையும் வரலாறு தந்த பாடமே ஒளிய எனது சொந்த அனுபவம் இல்லைங்கோ

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...