Friday, 17 December 2010

திசைமாறும் யாழ்ப்பாணம்

உலகிலே தமிழ் கலாச்சாரங்கள், தமிழ் பாரம்பரியங்கள்  மற்றும் இந்து  பண்பாட்டு விழுமியங்களை பறை சாற்றுகின்ற பிரதேசம் தான் யாழ் குடாநாடு. யாழ் குடா நாடானது பல வரலாற்று சுவடுகள் மற்றும் தனக்கென தனிதுவமிக்க வரலாற்று இலக்கியங்களை கொண்ட  ஒரு தனிப் பெரும் தமிழர்களின் தேசம். இது கல்வி மான்களையும் சகலகலா வித்தகர்களையும் உருவாக்குகின்ற ஒரு தேசம், அணைத்து சமூகங்களுக்கும் மத்தியில் இன்று தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு ஒரு அடித்தளமாகவும், பெண் இலக்கணத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் தேசம் இது. 

ஆனால் தற்போது இருக்கூடிய கொலை , கொள்ளை , களவு, சூதாட்டம், அடாவடித்தனம், அட்டூழியம் அத்தனையும் நிறைத்து மலிந்து   காணப்படும் இடமாக உருவெடுத்து வருகின்றது. யாழ் குடாநாட்டிற்கான  A9 வீதி திறக்கப்படத்தை தொடர்த்து இவை அத்தனையும் அரங்கேறி வருகின்றன. 
A9 வீதி திறக்கப்பட முன்னர் யாழ் குடநாட்டிற்கு வரும் வெளிநபர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது அதிலும் குறிப்பாக மேலைத்தேய கலச்சராத்தில் குடாநாட்டிற்குள் வரும்  கோப்பை கழுவிநிகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே இருத்தது, அதனால் யாழ் மக்களது கலாச்சாரமோ வாழ்க்கை முறைமையோ மாறி இருக்கவில்லை, 

இதேவேளை மக்களது நிதிகள் அனைத்தும் வங்கிகளின் வைப்புகளை நோக்கி நகர்ந்திருந்தன இதனால் தேவையற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் மற்றும் தொலைபேசி பாவை மட்டுப்படுதபட்ட அளவில் இருந்தது இதனால் யாழ் குடாநாட்டு மாணவர்களது சிந்தனை, செயல் அனைத்தும் கல்வியிலும், கல்விசார்  இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் நோக்கி நகர்ந்தன.

A9 வீதி திறக்கப்பட்டதன் பின்னர் இதுதான் தற்கால நாகரீகம் என்று பிதட்டிக் கொண்டு நாட்டுக்குள் வரும்  வெளிநாடு மோப்பநாய்களினாளும் (இந்நாட்டை சேர்ந்த கோப்பை கழுவிகள்)  யாழ்  நோக்கி படை எடுத்துள்ள நிறுவங்களின்  சந்தைப்படுத்தல் வெளியீடுகளாலும் பாரம்பரிய காலாசார விழுமியங்களும் , மக்களது வாழ்கை முறையையும் திசை மாறி செல்கின்றது. இதன்பிரதி பலிப்பு பாடசாலை மாணவர் முதல் பல்கலை கழக மாணவர்களில் இருந்து பெண்கள் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை.

 ஒரு ஆசிரியரை கண்டால் மாணவர்கள் பயந்த காலம் பொய் , மாணவர்களை கண்டால் ஆசிரியர் பயப்படும் நிலை உருவெடுத்துள்ளது, பாடசாலைகளிலே ஒழுக்க கட்டுப்பாடுகள் கட்டவுல்த்து விடப்பட்டிருக்கின்றது, இவை அனைத்திற்கும் "மது அருந்துவது தான் நாகரீகம்" என்ற கோப்பை கழுவிநிகளது நாகரிக வழிகாட்டலும் அதனுடன் கூடிய நாணய மாற்றமும்.

இதற்கு அப்பால் நாகரீக மது பிரியர்களிடம் மயங்கும் மாதுக்கள் இதன் விளைவு யாழ் போதன வைத்திய சாலையில் தெரிகிறது. இந்த கொடிய நாகரிக நோயின் நோக்கேல்லை பல்கலை கழக மாணவிகளிடம் இருந்து தற்போது பாடசாலை மாணவிகள் வரை பரந்திருப்பதை அண்மையில் வெளியான செய்திகள் உணர்த்து கின்றன. 

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, மறு முனையிலே அதிகரிந்து வரும் வேலை வெட்டியில்லா இளம் சமுதாயங்களின் அடாவடித்தனமும் கொள்ளைகளும். வாள்கள் மற்றும் இதர கூரிய ஆயுதங்கள் மூலம் பொது மக்களை மிரட்டியும் கொலைசெய்தும் கொள்ளை கும்பல்கள்  தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்  , இது  தற்போது யாழ் குடா நாட்டை பெரும் பீதியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஆனால் கடமை உணர்ச்சி கூடிய காவல் துறையினரால் வீதிகளிலே  நின்று பிழை பிடித்து பணம் பறிப்பதை விட வேறு ஏது முடியும் அவர்களால். 

இந்நிலை தொடருமாயின் இன்னும் சில வருடங்களில் ஆசியாவின் அதிசயமாக மாற இருக்கும் யாழ்பாணம், சோமாலியாவாகதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!





9 comments:

ம.தி.சுதா said...

நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது....
வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Jana said...

Good Writing Brother

Unknown said...

good

Kiruthigan said...

நல்லாருக்கு...

நிருஜன் said...

http://www.yarlmann.lk/head_view.asp?key_c=555

Unknown said...

பயம் எதற்கு... தமிழ்பாரம்பரியம், தமிழர் கலாச்சரம் என்று மார்தட்டிக்கொள்வதில் அர்தமில்லை, மாறும் உலகிற்கு ஏற்றபடி நாங்களும் மாறிக்கொள்ளா வேண்டியதுதான்.

நிருஜன் said...

மாறும் உலகிக்கேற்ப நாம் மாறாவிட்டால், நிச்சயமாக நாம் ஒரு கிணத்து தவளையாக தான் இருப்போம், அனால் அதற்காக எம் கலாச்சார பாரம்பரியங்களை ஒருபோதும் விட்டுவிட முடியாது!

தனிமரம் said...

நிரு அண்ணா நீங்கள் சொல்வதில் 100% உண்மையில்லை சில செய்யும் தவறுக்காக ஓட்டு மொத்த புலம் பெயர்ந்தவர்களை குற்றவாளியாக்கக்கூடாது.இளையதலைமுறை வழிதவறக்காரணம் அளவுக்கதிகமான கட்டுப்பாட்டில் இருந்தவர்கள்,அளவுகடந்த சுதந்திரம் பெற்றதன் விளைவுதான் கலாச்சாரம் சீர்குலையகாரணம்.நாகரிகமோகம் இப்போது சமூகத்தளங்களை அதன் அடிவேர்வரை அசைத்துப்பார்பது திறந்தபொருளாதாரத்தின் பக்கவிளைவு,உலம் இன்று கையளவுதேசமானதன் வெளிப்பாடு யாழ்லில்மட்டுமல்ல சாதாரன வென்னப்புவ வரை நீண்டு செண்றுள்ளது.சினிமாமோகம்,யாரைவீழ்த்திஎன்றாலும் தந்தேவையை தீர்த்துக்கொள்ளும் வியாபாரபோட்டி மனப்பான்மை போன்றவைதான் சமூகசீரலிவுக்கு காரணம் கோப்பைகழுவிகள் அல்ல உங்களின் மேல்தட்டுச்சிந்தனையின் நீட்சிதான் கோப்பைகழுவி என்றவார்த்தைப்பிரயோகம்.வடகிழக்கில் 80%மக்களின் ஓவ்வொருவீட்டிலும் ஓரு தந்தையோ,சகோதரனோ,சகோதரியோ,உறவுகலோ.செய்யும் தியாகத்தை .ஊரில்மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல் செய்யும் ஊதாரித்தனம்,வீன் ஆடம்பரத்திற்கு இங்கே தன்னையே வருத்தி தீபமாகி தன் தேவைகளை துறந்து வாழும்  கோப்பைகழுவிகளின் உணர்வுகளை நீங்களுமா   புரியாமல் ?இப்படிப்பொதுத்தளத்தில்  வார்தைகளை விசமாக கக்குவதற்கு படித்தவர்களை மூலதனமாக கொண்டயாழில் இருந்து ,செய்யும் தொழிலே தெய்வம் என்ற பூமியில் இருந்தா கோப்பைகழுவிகள் எண்ற செற்பிரயோகம்? itயில் வேலை செய்பவர்களை எப்படி அழைப்பீர்கள்.!!சமூக சீரலிவுக்கு அரசியல்காரணங்கள், வேலைவாய்ப்பு இன்மை,வளப்பங்கீட்டில் குறைபாடுகள் என பலவிசயம் உள்ளது.யாதர்தங்களை உள்வாங்கினால்தான் சமுகம் தெளிவு பெறும் என்கிறார் ஓசோ,

koomaganblogspot.fr said...

Hi Bro was that dish washer?????????????don't forget this dish washers pull up to nothern & eastern provence econamy steatus.Our generations dosen't look steatus in work.I think you become from uper clas comunity.Why don't you like changes from jaffna?You & your group wanna jaffnees people have to be stone age peoples isn"t it?
Koomagan

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...