Friday, 28 January 2011

ICC CRICKET WORLD CUP - திருப்பு முனைகள்

அண்மைக்காலமாக பத்தாவது உலகக்கின்ன  கிரிக்கெட்  ஆனது அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த தருணத்திலே அதன் வரலாற்று சுவடுகளை எடுத்தியம்ப வேண்டியது இக்காலத்தின் தேவை. பத்தாவது உலகக்கின்ன  கிரிக்கெட்  சமரானது எதிவரும் மாசி மாதம் 19ம் திகதி ஆசிய துணைக்கண்ட நாடுகளான இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேசில் இடம் பெற இருக்கின்றமை பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. 
குறிப்பாக  இலங்கை அணி கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களாக திகழும் ஆஸ்திரேலிய அணியினரை அவர்களது மண்ணில் வைத்து ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் வெற்றி கொண்டிருப்பதுடன் மத்தியுவ்ஸ்ன் சகலதுறை ஆட்டம் எதிர் அணிகளுக்கு பெரும் திண்டாட்டத்தை ஏட்படுத்தி வருகின்றது .
  இந்திய அணியானது தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் இளம் வீரர்களை கொண்டு போராடி இருக்கின்றது. அதிலும் யூசுப் பதானின் ஆட்டம் இந்திய அணிக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது. இதே வேளை பங்களாதேஷ் அணியின் அண்மை கால பெறுபேறுகள் கிரிக்கெட் அரங்கில் புதியதோர் எதிர் பார்ப்பை தொற்று வித்திருக்கிறது .  
பல  உலககின்ன இறுதிப்போட்டிகளில் கோட்டை விட்ட இங்கிலாந்து அணியானது Ashes தொடரை வென்று தனது பலத்தை வெளிபடுத்தி இருக்கின்ற இந்த தருணத்திலே நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடநானா முதல் மூன்று போட்டிகளையும் வென்று கிரிக்கெட் அரங்கில் புதிய தொரு  மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
எது  எவ்வாறு இருப்பினும், கடந்தகால பாதைகளை திரும்பி பார்க்குமிடத்து  உலககின்ன கிரிக்கெட் ஆனது 35 ஆண்டுகால வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட ஒரு போட்டி தொடர், 
இது 1975ம் ஆண்டு இங்கிலாந்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது டெஸ்ட் அந்தஸ்துடைய அறு நாடுகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இந்தியா மற்றும் நியூசிலாந்துடன் டெஸ்ட் அந்தஸ் அற்ற இலங்கை  அணியும் பங்கு பற்றி இருந்தது. 17 ஓட்டங்களால் ஆஸ்திரேலியா அணியை வெற்றி கொண்டு  மேற்கிந்திய தீவுகள் அணி கிண்ணத்தை தன்வசமாக்கியது, இந்த போட்டியானது அறுபது பந்து பரிமாற்றங்களை கொண்டமைந்ததுடன், வீரர்கள் பாரம்பரிய வெள்ளை கிரிக்கெட் சீருடையுடன் விளையாடி இருந்தனர். இங்கு சிவப்பு நிற தொட்பந்து பயன்படுத்தப்  பட்டிருந்தமை குறிப்பிடதக்க அம்சமாகும்.
இதேவேளை இரண்டாவது  உலக கின்ன போட்டி மற்றும் மூன்றாவது உலக கின்ன போட்டி என்பன முறையே 1979 மற்றும் 1983 ஆண்டுகளில்  மீண்டும் இங்கிலாந்தில் இடம் பெற்றிருந்தது.  இந்த போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் தோற்கடித்து கிண்ணத்தை தனதாக்கியது.
மூன்றாவது  உலககின்ன போட்டியிலே அனைவரதும் எதிர் பார்ப்புக்களையும் சிதறடித்து இந்திய அணி மிகவும் சவால் நிறைந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி கொண்டு கிண்ணத்தை தனதாக்கியது.
நான்காவது உலககின்ன போட்டியானது 1987 ம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டது. இரு  ஆசிய நாடுகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம் பெற்றிருந்தது . இதில் முதல் முறையாக தற்கால கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து கிண்ணத்தை தனதாக்கியது . இதில் பந்து பரிமாற்றங்களின் எண்ணிக்கையானது 60பதில் இருந்து 50ஆக குறைக்கப்பட்டு அது நியமமாக பேணப்பட்டு வருகின்றது.
 
ஐந்தாவது உலக கின்ன போட்டியானது 1992 ம் ஆண்டு ஆஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்தில் இடம் பெற்றிருந்தது இதில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்களால் வெற்றி கொண்டு கிண்ணத்தை வென்றது. இந்த போட்டிகளிலே வர்ண சீருடையுடன் வெள்ளை நிற தொல்பந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆறாவது உலககின்ன போட்டிகள் 1996ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பாடாகி இருந்தது, இதில் முதல் சுற்று போட்டிகள் சில இலங்கையிலும் இடம் பெற்றிருந்தது. இந்த போட்டியிலே அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வ எனும் பெரும் தலைகளின் துணிச்சலான  வீறுமிக்க வழிகாட்டல்,   முரளிதரனின் சூழல், சமிந்த வாஸின் வேகம் மற்றும் அதிரடி நாயகன் சனத் ஜெயசூர்யாவின் சகலதுறை ஆட்டம் என்பன ஒருமித்து முழங்க முதல் முறையாக பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை தன்வசமாக்கியது .
பதினாறு வருடங்களுக்கு பின் மீண்டும் ஏழாவது போட்டியானது  1999ம்  ஆண்டு இங்கிலாந்தில் ஏற்பாடானது. இதில் மிக இலகுவாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கிண்ணத்தை தன்வசப்படுதியது .  இங்கு  ஆஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான அரை இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பையும்  சுவரசியத்தையும் ஏற்படுத்தி இருந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எட்டாவது போட்டியானது 2003ம் ஆண்டு தென்னாபிரிக்க, சிம்பாவே மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் ஏற்பாடாகி இருந்தது.  இதிலே இலங்கை அணியை அரையிறுதியில் வெற்றி கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியிலே ரிக்கி பொன்டிங்கின் அதிரடி நிறைந்த அசத்தலான ஆட்டத்தினால் இந்திய அணியை 154 ஓட்டங்களால் மண்கவ்வ செய்து  மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியது.  இதிலே பதின்நான்கு அணிகள் பங்கு பற்றி இருந்தமை சிறப்பம்சமாகும்.
2007ம் ஆண்டு ஒன்பதாவது உலககின்ன சமரானது மேற்கிந்திய தீவுகளிலே இடம் பெற்றிருத்தது . இதன் இறுதிப்போட்டியில் மழை போட்டியின் தீர்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக உருவேடுத்திருக்க, டக்வத் லுவிஸ் முறைப்படி இலங்கை அணியை 56 ஓட்டங்களால் வெற்றி கொண்டு நான்காவது முறையாகவுமும் (தொடர்ந்து மூன்று முறை) கிண்ணத்தை தன்வசமாக்கியது பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.



4 comments:

aiasuhail.blogspot.com said...

சிறப்பான ஒரு அலசல் அல்லது பார்வை. அருமை.

தொடரட்டும் உங்கள் பயணம்

உலகக் கிண்ணக் கிரிக்கற் 2011-கரகோசம் செய்து செய்து வாங்க
http://aiasuhail.blogspot.com/2011/01/2011_28.html

Jana said...

நல்லதொரு அலசல்.
மறுப்பம் ரெனிஸ், நடால், ரொஜரின் வெளியேற்றம் மனதில் கவலை!
இம்முறை வேள்ட் கப்பிலும் இதுபோன்ற வெளியேற்றங்கள் இருக்கும்!!

ம.தி.சுதா said...

நல்லா வடித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..

Ashwin-WIN said...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...