Saturday, 13 August 2011

இந்தியாவின் படுதோல்விகள் உணர்த்துவதென்ன?

உலகக்கின்ன கிரிக்கெட் ஆனது இந்த வருட ஆரம்பத்திலே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருந்ததை யாராலும் மறக்க முடியாது. அதை விட இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றிய பின் ரசிகர்கள் என்ற பெயரில் பல கோமாளிகள் விட்ட அறிக்கைகளை போன்று யாராலும் அறிக்கை விடவும் முடியாது.

மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின் இந்தியாவின் தலைக்கனம் உச்சவரம்பை மீறி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் சபையை தன் வசம் வைத்திருக்கும் இறுமாப்பில் பல புது விதிகளை இந்திய அணிக்கு சாதகமான முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தியதுடன், சில பாதகமான விதிகளை செயலிழக்கவும் செய்தது. 

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தாங்கள் தான் யாம்பவான்கள் என்று இறுமாப்பு காட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, முதல் இடத்தை பிடித்து ஒரு வருடம் கூட முடிவுராத நிலையில் வந்திருக்கின்றது ஆப்பு இங்கிலாந்திடம் இருந்து. (வட போப்போதே)

"தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்" என்னு நம்ம பளசுகள் சும்மாவ சொல்லிச்சு, இந்திய கிரிக்கெட் சபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட அல்லது நீக்கப்பட்ட மூன்றாவது நடுவரின் மீள் பரிசோதனை முறை, இங்கிலாந்தில் இந்திய அணிக்கே ஆப்பானதுடன் இங்கிலாந்து வீரர் "போர்ட் "  கட்றிக் சாதனை நிகழ்த்தவும் ஏதுவாக அமைந்தது. 

அப்புறம் ராசிக்கார பயபுள்ள தோனிக்கு இப்போ அட்டமத்தில சனியன் போல, பாவம் இங்கிலாந்துடனான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுகளத்தை வந்து பார்ப்பது போவதுமாக இருந்தார். இந்த பயபிள்ளைகள் தான் செய்யுறாங்கலில்லை என்னு சேவாக்கை கொன்னு வந்தாங்க அணிக்குள்ள, அவரோ அதிரடி வீரர் ஆச்சே, அதிரடியா வந்தாறு - அதிரடியாவே பவலியனுக்கு போய்ட்டாரு இரண்டு இன்னிங்சும். 

அதுக்கப்புறம்,வீராப்பு பேசுற ஸ்ரீசாந்த எறியிறான், எறியிறான் எவ்வளவு முடியுமோ அவளவுக்கு எறிஞ்சான், அனா இந்த வெள்ளகார பசங்க அதில என்னமோ மாதிரி எல்லாம் வித்தை காட்டியிருந்தாங்க! (பாவம் அழுதிருப்பான் ஹர்பஜன் சிங்கும் இல்லை துடைகிறதுக்கு)

இன்று வரை இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை கண்டிருப்பதுடன், மூன்றாவது போட்டியில் படுதோல்வியை தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த தொடரிலே இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் தோல்வியுறுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்ட வண்ணமுள்ளர்கள். 

இந்தியாவின் இத்தகைய படுதொல்விக்கு பலகாரணங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன.
  • உலக கிண்ணத்தை வென்ற இறுமாப்பு 
  • இங்கிலாந்து வீரர்களின் திறமையான சகலதுறை ஆட்டம்
  • IPL பண மோகம் 
  • IPL மற்றும் T20 போட்டிகளில் உள்ள கவனம் 
  • டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமற்ற பந்து விச்சாளர்கள்
  • வயது வந்த வீரர்கள் அணியில் அதிகம் உள்ளமை.
  • இங்கிலாந்தில் இந்திய பூசாரிகளோ, மாயயால வித்தைக்காரர்காலாலோ வித்தை எதுவும் செய்ய முடியாமை!
எவ்வாறு இந்திய அணி படு தோல்வி அடைந்தாலும், இந்திய ரசிகர்களிட மீசையில மண் ஓட்டாதாம்.  (வேற என்னத்தை சொல்லுவாங்க: ஷாகீர் கான் இல்லாததால தான் இந்த தோல்விகள் எல்லாம் என்னுவாங்க போல) 


இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை!


Friday, 17 June 2011

அவன் இவன் சுட சுட!


ஏ.ஜி.எஸ் தயாரிப்பில்,பாலாவின் நீண்ட நாள் முயற்சியோடு கூடிய இயக்கத்தில், ஆர்யா- மது ஷாலினி மற்றும் விசாலின் குறும்பு தனம் நிறைந்த நடிப்பில் வெளிவந்திருக்கின்ற ஒரு காமெடி திரைப்படம் தான் அவன் இவன்,  படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைதிருக்கின்றமை இதை மேலும் மேருகூட்டி இருக்கின்றது என்று கூட கூறலாம், 
இங்கு ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடிக்கு பஞ்சமே இல்லைகள்ளனுக்கு தான் போலீஸ்காரன் வேலை குடுப்பாங்க என்று நம்ம முன்னோர் சும்மாவா சொன்னார்கள், அதே போல தான் இங்கும் கள்ளன் போலீஸ் விளையாட்டு படத்தை மேலும் காமெடி தனமாக்கி பார்வையாளர்கள் அனைவரையும் சற்றே கிலு கிலுக்க வைத்திருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது
முன்னுக்கு கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் பிற்பாதியில எல்லாரையும் சற்றே சிந்திக்க வைத்துள்ளது என்று கூடசொல்லலாம். விசாலின் பெண்மை தனமா நடிப்பு, பசங்க அனைவரையும் கவர்ந்தே இழுத்திருக்கும் அளவுக்கு அவரது நடிப்பின் உச்ச கட்ட நிலை அங்கு வெளி படுத்தப்படிருகிறது. 

குறிப்பு:  படத்தை பாத்திட்டு எழுதிறது அவன் படத்தை பாக்காமலே எழுதிறது இவன்!

Tuesday, 14 June 2011

அஜித், விஜய் மற்றும் இதர காமடி பீசுகள் ??


அன்றே "உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்களே" என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர். நாமெல்லாம் நாளும் பொழுதும் எடுப்பதோ ஆயிரம் கதாபாத்திரங்கள்,  அதுக்கு மேலாலும் தேவையா இந்த தமிழ் சினிமா? 

அன்பார்ந்த தல, தளபதி வால் ரசிகர்களே, தமிழ் சினிமா ஒரு சாக்கடை அதில் இருக்கின்ற குட்டைகள் தான் இந்த நடிகர்கள், இந்த குட்டைகள் செய்வதோ ஊரை பேக்காட்டுகின்ற தொழில், சாக்கடைக்கு வால் ஒன்று இருக்கும் என்றால் அது எவ்வாறு இருக்கும்? அதுவும் ஒரு சாக்கடையை விட கேவலமான நிலையில் தான் இருக்கும், அது போல தான் இந்த சாக்கடை தமிழ் சினிமா நடிகர்களுக்கு வால் பிடியாக இருந்து, நான் ஒரு தலை/தளபதி/ தறுதலை ரசிகன் எண்று தம்பட்டம் அடிப்பவர்கள் யாராக இருப்பார்கள்? 

நடிகர்களோ ஒரு பச்சோந்திகள், எப்போது எப்பிடி இருப்பார்கள் என்றே சொல்ல முடியாது, காரணம் சந்தர்ப்பதிற்கேற்றவாறு மாறும் மனோ பாவம் கொண்டவர்கள். கலைஞருக்கு விழா எடுத்த தமிழ் திரை உலகம் இன்று அம்மையாரை புகழ்ந்து தள்ளுகின்றது. முன்னர் காங்கிரசை எதிர்த்த அம்மையார் இப்போ பிரதமரிடம் நல்லெண்ண விஜயம் மேற்கொள்கிறாவாம். 

தமிழ் சினிமாவிற்கு வால்பிடிக்கும் உங்களால் தான், ஒரு ரூபாவுக்கு வரையறையற்ற அழைப்பு என்ற பகட்டு வசதியை வழங்கி விட்டு, பல கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த 2G இணைப்புகளை, பல மில்லியன் செலவழித்து தன் விட்டில் கருணாநிதி அன் கம்பனி பூட்டிய அந்த கேவலம் கேட்ட நிலை தமிழ் நாட்டில் மிக துணிவான முறையில் உருவேடுத்திருக்கிறது. 

உங்களது தார்மீக கறுமங்களலான சூப்பர் ஸ்டாறு, தலை, தறுதலை, இளைய தலை வலி போன்றவர்களின் உடந்தையுடன் தமிழ் சினிமாவுக்கு வரி விலக்கலித்தாரம் அறல பேந்த கருணாநிதியார்! யாராச்சும் வால்பிடிகள் இதை பற்றி சிந்தித்தீர்க்கலா? மக்களுக்கு வரவேண்டிய வரி பணத்தை தான் விட்டில் பூட்டுவதற்காக போட்ட ஒரு தந்துரோபாய காய் நகர்த்தல் தான் இது! 

யார் இந்த நடிகர்கள்? இவர்கள் ஏன் நடிகிறார்கள் என்று வால்பிடிகள் சிந்தித்திருந்தால் இன்று ஆசிய துணை கண்ட நாடுகள் அரசியல், பொது நிர்வாகம் , உட்கட்டமைப்பு, தகவல் தொழில் நுட்பம் என்று ஒவ்வொரு துறையிலும் உலக வல்லரசுகளுக்கு சவால் விடும் அளவுக்கு முன்நேறி இருக்கும், 

இந்த பகட்டு வாழ்கை வாழும் கூட்டத்திற்கு வால் பிடிப்பதை விடுத்து,  அப்துல் கலாம் போன்ற அறிஞர்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் அமைத்து பாருங்கள், அப்போது புலப்படும் இந்த தமிழ் திரை உலகம் எந்த மூலைக்குள் என்று,  நடிப்பு திலகங்களை  தேர்தல் களங்களில் இருந்து துரத்தி விட்டு, அப்துல் கலாம் - பிரதமராகவும், அம்பானி சகோதரர்கள் - நிதி அமைச்சராகவும், சச்சின் டெண்டுல்கர் - விளையாட்டு துறை அமைச்சராகவும் நிறுத்துங்கள்/ ஆதரியுங்கள், பின்பு இந்திய ஒரு உலக அதிசயம் தான். 

Saturday, 11 June 2011

அஷ்வினின் அம்பலங்கள்!

அஷ்வின் என்ற பெயரை கேள்விப்படாதவர்கள் இருக்கேவே முடியாது, அதே போல் அண்மைக்காலமாக இந்த பெயர் பலராலும் பேசப்பட்டு வருவதை யாராலும் மறுக்கவும் முடியாது. அண்மையில் நடந்து முடிந்த உலககிண்ன கிரிக்கெட் மற்றும் IPL என அனைத்திலும் தடம் பதித்த பெயர் இது.  இந்த பெயரானது சென்னை சேப்பாக்கம் (பந்திட்ட மட்டும்) முதல் வெள்ளவத்தை, யாழ்பாணம் பிறவுன் வீதி என அடி வேண்டாத இடமே இல்ல என்று கூட கூறலாம். 

கால ஓட்டத்தின் பலவீனங்களை பயன்படுத்தி அதில் தங்களது மாயயால வித்தைகளை காட்டி வரும் பெயர் தான் இது. குறிப்பாக சொல்லப்போனால் பெண்களிடம் பரவாலக பேசப்படுவது என்பதற்கப்பால் பெண்களிடம் பேச்சு வாங்கிய பெயர் என்று சொன்னால் மிகையாகாது. வீதியில் செல்லும் பெண் பிள்ளைகள் முதல் முகபுத்தகத்தில் இருக்கும் பிள்ளைகள் வரை யாரையும் விட்டதில்லை இந்த பெயர். 

இன்னும் சொல்ல போனால் இந்த பெயரை பயன்படுத்தும் ஒருவர் எதிலும் தலைவராக இருக்க முற்படமாட்டார்கலாம். காரணம் மகளீர் பாடசாலைகளுக்கு தங்களது பிரசன்னத்தை உறுத்திப்படுத்தும் முகமாக ஏதாவது ஒரு அப்பிரின்டிசை தலைவாரக போட்டு விட்டு செயலாளராக இருந்து தங்களது அந்தரங்க கருமங்களை செய்வார்கலாம்.

நீங்கள் நினைப்பது போல இதில் வரும் கசப்பான அலசல்கள் அத்தனையும் இந்திய கிரிக்கெட் அணியின் உடைய சுழல் பந்து வீச்சாளர் அஷ்வினை பற்றி அல்ல, இது ஒரு பினாமி நபரை பற்றிய அலசல் தான். குறிப்பாக சொல்ல போனால் தமிழ் வலைபதிவராக அஸ்வின் என்ற பெயரில் வலம் வரும் ஒரு கற்பனை பாத்திரம் பற்றியதுங்க. 

அஸ்வின், வர்மன் என்றெல்லாம் புனைப்பெயரை தனக்கு தானே சூட்டிக்கொண்டு சமூகத்தின் முன் வலம்வரும் ஒரு வலைபதிவர் தான் இவர். இவர் எங்கு சென்றாலும் சரி, எதை எடுத்தாலும் சரி ஏன் தனது நியபெயரை பாவிகாமல் ஒரு புனைப் பெயரில் வலம் வருகின்றார் என பல நண்பர்கள் கேள்வி எழுப்பிய வண்ணமே இருக்கிறார்கள்? 

நீங்க நினைக்கலாம் இவருக்கு அரசியலில் எதிரிகள் நிறைய இருப்தோ என்னவோ என்று, அனால் உண்மை அதுவல்ல, நம்ம 2007 வெள்ளவத்தை வெட்டி சங்க தலைவர் கண்ணா சிவகணேசன் தலைமையில், மொக்கை பதிவர் மைந்தன் சிவாவின் ஆலோசனைக்கமைய வெட்டி குழுவொன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் வெளியிடப்பட்ட கண்ணாவின் சாமியார் வாழ்வு என்ற அறிக்கை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும்: அஸ்வின் என்ற பெயரில் 1988ம் ஆண்டில் எந்த ஒரு பிறப்பு பதிவும் இல்லை இன்றும், இது 2007களின் இறுதியில் வெட்டிதனம் காரனமாக பெண் பிள்ளைகளுக்கு ஏய்ப்பு விடுவதை தூர நோக்காக கொண்டு உருவெடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. 

மேலும் இந்த பெயரில் கணக்கில்லாத சமூகவலை அமைப்பே இல்லை என்பதுடன், மொரட்டுவ பல்கலைக்கழக வட்டகற்களில் ( சம கட்டு / ஒரு பாதுகாப்பான இருப்பிடம்) அந்தி சாயும் வேளைகளில் இவர் யார் யாருக்காகவோ காத்த வண்ணம் இருப்பதை கேட்டு, என்னமோ எதோ தெரியவில்லை மொரட்டுவ பல்கலைக்கழக நண்பர்கள் பலரும் அழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகின்றது.  

இவ்வாறானதொரு புலணாய்வு நடப்பதை கேள்வி உற்ற நம்ம அனுதிணன், விரிவுரைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கொழும்பு பல்கலை வளாகத்தினுள் இருப்பதை தவிர்த்து காலா காலத்திற்கு விட்டில் பிரசன்னமாகி விடுவதாகவும் செய்திகள் தெருவிக்கின்றன. 

எது எவ்வாறு இருப்பினும், அஷ்வினின் அம்பலங்கள் தொடர்பாக மேலும் தெரிந்தவர்கள் கீழே பின்நூட்டுமாறு வேண்டபடுவதுடன்,வெள்ளவத்தை வெட்டி சங்க ஆய்வில் அடுத்து மைந்தன் சிவா சிக்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

குறிப்பு: அஸ்வினின் கட்டளை தள சுட்டி: அஷ்வின் அரங்கம்

Sunday, 5 June 2011

வால்பிடிகள் Vs வாளிகள் - வெல்லப் போவது யார்?

உலகிலே மனிதர்கள் பல விதம் , அதில் ஒரு விதம் தான் இந்த வால் பிடிகள், யாரவது ஒரு பிரபலமானவரோ அல்லது தான் ஒரு பிரபலவாதி போல் தன்னை சமூகத்தின் முன் பாவனை செய்பவருக்கு வால் பிடிப்பதன் மூலம் தாங்கள் எதையோ சாதித்தது போல் பிதட்டிக் கொள்கிறார்கள் ஒரு சில வால் பிடிகள், பொது நிகழ்வுகளாக இருக்கட்டும், சமூக வலையமைப்புகாளாக இருக்கட்டும், ஏன் பினாமி அரசியல் மேடைகளாக இருக்கட்டும் இந்த வால் பிடிகளின் கைங்கரியங்களுக்கு ஒரு அளவே இல்லை. 

இங்கு குறிப்பாக சொல்ல போனால் நாய் வால்களை திருத்தவே முடியாது, தங்கள் வால் பிடிப்பது போதாதென்று அதை Facebook, twitter போன்றவற்றில் like போட்டும், comment பண்ணியும் மற்றவங்களை கடுப்பாக்கிடுவாங்க. நல்லதோ, கெட்டதோ தங்களது பினாமி பிரபலவாதிகள் போட்டா காணும் அதுக்கு உடனே likeபண்றதும் பத்தாம, super, நல்லாருக்கு என்று அடிப்பாங்க 1008 commentsதங்களுக்கேன்றொரு தனித்துவம் இல்லாதவர் களாலும் தங்களுகேன்றொரு இலட்சிய நோக்கிலாத வால் பிடிகளாலும் தான் ஒரு சிலர் தம்மை தாமே பிரபல வாதிகள் போல் சமுகத்தின் முன் பாவனை செய்கிறார்கள். 

இன்னும் சொல்லப்போனால் இதுதான் தற்கால தமிழ் கலாசாரம் என்று சொல்லிக்கொன்று, தமிழ் கலாசாரத்தையும் சீரழிப்பது மட்டுமன்றி தமிழ் மக்களின் பணத்தை கோடி, கோடியாக சுருட்டும் தமிழ் சினிமா வளர்ச்சி அடைவதற்கும் இத்த வால்பிடிகலே காரணம், இந்த வால் பிடிகளால் உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள் தான் இன்று இந்தியாவை உழல்கள் நிறைந்த நாடக மாற்றி இருக்கின்றது. இலங்கையில் தற்போது 4Gஐ பற்றி பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்தியாவில் 2G பற்றி தான் பேசிகொண்டிருக்கிறார்கள். 

மனிதர்களில் மற்றொரு ராகம் தான் இந்த வாளிகள், இதில் கிணத்து வாளிகளை பார்த்தால்: இவர்களை ஒரு வழியல் கூட்டம் என்று கூட கூறலாம். இவர்கள் ஒரு வகை கையால் ஆகாதவர்கள், இவர்கள் கிணத்துக்குள்  இருப்பதோ, என்னவோ  எதை எடுத்தாலும் ஒரு குறித்த நபரை பற்றியே பிதட்டிக்கொண்டிருப்பார்கள், குறித்த நபர் தான் அவர்களுக்கு உலகம் என்றது பொல திரிவார்கள், இவர்களும் சமூகவலையமைப்புகளில் தங்களது வாளிகலை வால் பிடிகள் போல் வைத்த வண்ணமே இருப்பார்கள். 


பல்கலைகழக வாளிகளை பார்த்தால்:இவர்கள் தங்கள் வீனாபோன பெண்களின் நாயகர்களாக இருக்க வேண்டும் எண்பதற்காகவே பல்கலை கழகங்களில் மகளீர் சங்கம் அமைத்து அதன் நாளாந்த கருமங்களை செவ்வனவே செய்ததும் வருவாங்க: அதுக்கும் மேலால கம்பஸ் degree மற்றும் Professional exam முடிக்கறதுக்கு முதல்ல ஆப்படிபதில PhD முடிக்கவும்  முயற்சி செய்வாங்க. கருவாட்டிட்கும், ஊத்த மண்ணிற்கும் விலை ஏத்தும் கூட்டம் என்று கூட இவங்களை கூறலாம். 4வருடம் முடிய தேவாதாசன் ஆகிறதும் இந்த புத்தக பூச்சிகள் தான்! 

Saturday, 14 May 2011

#வேலை #வீடு #வீடு + காரி எல்லாம் தேவை தானா?

ஒரு மனுஷன் காலத்தை ஓட்டனும் ஏன்டா எத்தனையோ சவால்களை தாண்ட வேண்டி இருக்கு. இதை எல்லாம் தாண்டினாதான் சமூகத்தில ஒருவனை மனுசனா மதிக்கிறாங்க. ஒரு மனுஷனுக்கு இருக்கின்ற பெரிய சவால்கள் இவைதான்க #வேலை, #வீடு + காரி. (இதில் வரும் பகிவுகள் அத்தனையும் வரலாறு தந்த பாடமே ஒளிய எனது சொந்த அனுபவம் இல்லைங்கோ)

ஒருத்தன் வேலைக்கு பொய் வேலை செய்து களைக்கிறதுக்கு முதல்ல CV அனுப்பியே களைச்சுப்போய்டுவாங்க. அப்புறம் Interview என்ற பெயர்ல போன் பண்ணி களுத்தறுப்பாங்க, அதுக்கு மேலால இதுதான் எங்கட recruitment process எண்டு சொல்லி சொல்லி ஒவ்வரு கம்பனியுமும் பத்து பண்டண்டு interview வைத்து வதைப்பங்க, வதைத்து முடிய கடைசியில சொல்லுவாங்க you are not eligible எண்டு ( எப்பிடி கடுப்பாகும் ).

 இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தனிப்பட்ட செல்வாக்கு கையோங்குமானால் எப்பிடி எல்லாம் பிழை பிடிக்கலாம் எண்டு பாத்திட்டிருப்பாங்க, அதுவும் நீங்க ஒரு தமிழ் மகன் எண்டு தெரிஞ்சிட்டா காணும் சகோதர மொழியில இருக்கிற பாண்டித்தியம் நிறைந்த வசனத்தில எல்லாம் கதைச்சே நம்மல விரட்டுவாங்க, இவை பெரும்பாலும் வங்கிகளில் இடம் பெறுவது வழமை. (இதை சகிக்க முடியாமல் தான் வெளிநாடுகளுக்கு நம்ம உறவுகள் புலம் பெயர்கிறார்கள் போல). வேலை கிடைசிடுச்சே என்னு பெருமூச்சு விட முடியுமா? அதுக்கப்புறமும் #சம்பளம் #பதவியுயர்வு #சலுகைகள் என்னு இருக்கு பல வில்லங்கம் அடுத்தடுத்து. 

அப்புறம் பத்து பதினைந்து வருஷமா உழைச்சாலும் கொழும்பிலையோ அல்லது யாழ்ப்பாணத்திலையோ வீடு வாங்குவது என்பது தற்போது ஒரு இயலாத காரியம். கொள்ளை அடிச்சாலும் வாங்க முயாதஅளவுக்கு யாழ்ப்பாண வீடுகளின் விலை கிடு கிடு வென கோடிகளின் மடங்கில் யுயர்ந்தவண்ணமுள்ளது,  அதுதான் கஷ்டம் எண்டு கொழும்பிலே ஒரு தட்டை வேண்ட முற்பட்டா கள்ள உறுதி கொடுத்து ஏய்ப்பு செய்யும் கூட்டம் இருக்கும் வரை எப்படி முடியும்? அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் சோலை வரி 300/- ஆண்டுக்கு அனா கொழும்பில் அது 12000/- வருடம்.  

தலைகீழாக நின்று வீடு வாங்கினாலும் அந்த விட்டுக்கு ஒரு +காரி என்கிற conceptக்கு வரும் போது தான் ஐயா பெரிய வில்லங்கம் காத்திருக்கும்.  எப்பிடி தான்  #வேலை, #வீடு நல்லதாக அமைந்தாலும் "வீடு + காரி" உரிய பிரமாணங்களை/எதிர் பார்ப்புக்களுடன் ஒத்திருக்காவிட்டால் நம்ம இளைஞர்களது எதிகாலம் பாழும் குழிக்குள் தள்ளப்ப்படுமாம். (இதால தான் பசங்க சிலர் குடியில்(வீடு) இருந்து குடியை நோக்கி நகர்கிறார்களோ) 

அதாவது அப்பா-அம்மா இருக்காங்களே அவங்க  "வீடு + காரிஐ" select பண்ணுவாங்க என்டிருந்தா: அதுக்குள்ள கல்யாண தரகர்கள் மூக்க நுழைத்து (புரோக்கர்) தனது வியாபாரதனத்தை காட்டி பசங்கட வாழ்கைய குட்டி சுவர் ஆக்கிடுவாங்கலாம். கல்யாண தரகர்ட தொல்லையால தாங்களே தங்களது கொள்கைகள், பிரமாணங்கள் மற்றும் எதிபார்ப்புகளுடன் இணைய கூடிய ஒரு "வீடு + காரிஐ" தெரிவு செய்ய முற்படும் பட்சத்தில் தரகரை விட பெரிய வில்லன்கள் இங்க தான் தங்கட ரூபத்தை காட்டுறாங்க.

அதிலையும் பல்கலை கழகங்களில் சொல்லவே தேவை இல்லையாம் இந்த வில்லன் தொழிலை பற்றி:   ஆத்தல் எடுக்கும் கூட்டமும், குள்ளநரி கூட்டமும் இருக்கும் போது அங்கு எப்பிடி தெரிவு செய்ய முடியுமாம்? இவற்றுக்கு கரணம் பெரும்பாலும் 90% பல்கலை கழக அனுமதி பெறுபவர்கள் பாடசாலை காலங்களில் வெறும் புத்தக பூச்சிகாளாக இருந்தவர்கள் தான், இவர்களுக்கு  இணைப்பாட விதான செயற்பாடுகள் என்றால் என்ன வென்றே தெரியாது.  காணாததை கண்ட புத்த பூச்சிகள் தான் குட்டையை குழப்பி விட்டு கடைசியில கருவாட்டுக்கு விலை ஏத்துவாங்க என்கிறார்கள் அனுபவசாலிகள்! (சீனியர் அக்காவுக்கு ரூட்டு போட்டா சோலியில்லையாமே) 

#வேலை, #வீடு,  #வீடு + காரி என்கிற மூன்றும் சிறப்பாக ஒன்றிணையும் பட்சத்தில் ஒருவன் எதை வேண்டும் என்றாலும் சாதிக்க முடியும். அல்லாது போனால் அவனது வாழ்க்கை ஒரு தொங்கு பாலம் போல் ஈடாடும் என்கிறார்கள் அனுபவபட்டவர்கள்.  

"இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல யுவதிகளுக்கும் கூட பொருந்துமாம் " 

Saturday, 12 March 2011

இந்துகளின் சமர் (BATTLE OF THE HINDUS) - 2011


யாழ்ப்பாணத்தின் பெரும் புகழ் பூர்த்த இரு இந்து கல்லூரிகளான யாழ்ப்பாணம் இந்துகல்லுரி மற்றும் கொக்குவில் இந்து கல்லுரி களுக்கிடையான நான்காவது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் இம்முறை எதிவரும் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லுரி மைதானத்தில் வெகு விமர்சையாக ஆரம்பமாக உள்ளது.

2010 ம் ஆண்டிலே கொக்குவில் இந்து கல்லூரி தனது 100 வது ஆண்டில் காலடி எடுதுவைதிருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்து கல்லுரிஜின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் தனது 100 வது ஆண்டில் தடம் பதித்துள்ள இந்தருநமானது இரு கல்லூரிகளையும் பொருத்தமட்டில் வரலாற்று சுவடுகளில் எழுதப்பட வேண்டிய ஆண்டாகும் எனவே இந்த 2011ம் ஆண்டிற்கான 4வது வருடாந்த இந்துகளின் கிரிக்கெட் சமர் யாழ் கிரிக்கெட் சமர்களின் வரலாற்றில் புதியதொரு அத்தியாத்தை எழுதும் என்பதில் ஐயமில்லை.
   
இந்துகள் சமரானது 2008 ம் ஆண்டு முதல் முறையாக இரு கல்லூரிகளுக்கும் இடையே கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது. இதில் இரு கல்லூரி வீரர்களும் தமது திறமைஜை முழுமையாக வெளிபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 2009ம் ஆண்டு தவிக்க முடியாத காரணங்கலால் ஆடம்பரங்கள் எதுவும் இன்றி மிக எளிமையான முறைஜில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றிருந்தது. இப்போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.

இதே நேரம் 2010ம் ஆண்டிற்கான இந்துகள் சமர் கொக்குவில் இந்து கலூரிஜின் விஸ்தரிக்கப்பட்ட மைதானத்தின் புதிய ஆடுகளத்தில் இப்போட்டி இடம்பெற இருந்தது. இந்த போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.

இதேவேளை இரு கல்லூரிகளுக்கும் இடையிலான மடுப்படுத்தப்பட்ட பந்து பரிமாற்றங்களை கொண்ட சபாலிங்கம் வெற்றி கிண்ணத்திற்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ம் திகதி நான்காவது முறையாக கொக்குவில் இந்து கல்லூரி நாகலிங்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த மூன்று போட்டிகளிலே முதல் இரண்டு போட்டிகளில் யாழ் இந்து கல்லூரியும் மூன்றாவது போட்டியில் கொக்குவில் இந்து கல்லூரியும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்க அம்சமாகும். 

இதே வேளை கொக்குவில் இந்து கல்லூரி அணிஜினர் இவ்வருடம் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை அணிகளுகிடைஜிலான கிரிக்கெட் தொடரின் 3வது பிரிவில் கால் இறுதிவரை முன்னேறி இருந்தனர் அதேவேளை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிஜினரும் இந்தொடரில் பல வெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் இப்போட்டியின் போதான ஸ்கோர் விபரங்களை www.kokuvilhindu.net எனும் இணைய தளம் ஊடாக அறிந்து கொள்ள முடியும். எனவே இந்த 2011ம் ஆண்டிட்கான இந்துகள் சமர் யாழ் குடாநட்டில் பலத்த எதிபர்பை உருவாக்கும் என்பது கிரிக்கெட் அவலர்கது எதிர் பார்ப்பாகும். 

இணைப்பு: கடந்த மூன்று இந்துகள் சமரின் ஸ்கோர் அட்டவணை.
2008 
1st innings
K.H.C 200 all out
J.H.C 148 all out
2nd innings
K.H.C 123/3 declare
J.H.C 43/2

2009
1st innings
K.H.C 290 all out
J.H.C 170 all out
2nd   innings
K.H.C 84/1 

2010
1st innings
J.H.C 159 all out
K.H.C 164 all out
2nd   innings
J.H.C 104/9 




நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...