Tuesday, 17 May 2011

தமிழ் சினிமா + அரசியல் = பாழும்குழி

"ஏமாறுபவன் இருக்கும் வரை எமாத்துபவனும் இருந்துகிட்டே தான் இருப்பான்". உலகிலே இருக்ககூடிய தமிழ் மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டுகின்ற துறைதான் தமிழ் சினிமா.  முன்றாம் வகுப்பு பாசாகாத முட்டாள்கள் நடித்துவிட்டு கோடி கோடியா அள்றாங்க அதை பாத்திட்டு நம்மசனங்க கொட்டாவி விட்டு விட்டு வருதுங்க. ஏமாற்றி பணத்தை சுருட்டின கைகள் அறல போன வயசில சும்மா இருக்குமா? அறல பேந்த வாயசில பணத்த சுருட்டுவதட்காக ஆழமான சிந்தனைகள் நிறைந்த அரசியலை பயன்படுதிறாங்க முன்றாம் வகுப்பு பாசாகாத முட்டாள்கள்.  

பிரித்தானியர் ஆசிய துணைக்கண்ட நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க முன்பும், வழக்கிய பின்பும் சிறிது காலம் இந்நாடுகளின் அரசியல் நிர்வாக பணிகளில் இருந்தவர்கள் கல்விமான்களாகவும், புத்தி ஜீவிகளாகவும் இருந்தார்கள்.  சேர் பொன் ராமநாதன், அறிஞர் அண்ணா, அப்துல் கலாம் போன்ற அறிவாளிகள் இருந்ததன் காரணமாகத்தான் ஆசிய துனைக்கண்ட நாடுகள் சுதந்திரம் அடைந்தது மட்டுமல்லாது இன்று உலக வல்லரசுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துவருகின்றது. 

அறிவாளிகளையும், கல்வி மான்களையும் அமைச்சரவையிலும் அரச நிர்வாக கருமங்களில் இணைத்ததன் காரணமாகதான் இன்று இலங்கை அரசாங்கம் 30 வருட கொடிய நோயை 3வருடங்களில் அழித்தொழித்ததுடன், உலக வல்லரசுகளின் அடக்குமுறைக்கு சவால் விடக்கூடிய பலத்தையும் கொண்டிருக்கின்றது. அதாவது இலங்கை ஜனாதிபதி: ஒரு சட்டத்தரணி, வெளிவிவகார அமைச்சர்: ஒரு பேராசிரியர், கல்வி அமைச்சர் + உயர் கல்வி அமைச்சர் : இருவரும் முகாமைத்துவ பட்டதாரிகள். 

இவை இவ்வாறிருக்க தங்களது பகட்டுத்தனமான நடிப்பின் மூலம் தமிழ் மக்களது வாழ்க்கை முறையை முற்றாக மாற்றி வருகின்றது இந்த தமிழ் சினிமா, இதற்கு துணைபோகிறது வேலை வெட்டி இல்லா தமிழ் பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சின்னத்திரை. சின்னத்திரை சின்ன வீடு, மாமியார்- மருமகள் என்கிற சிறுபிள்ளைத்தனமான கருப்பொருளை வைத்து ஏமாற்ற, அடிதடி, ரவ்டீசம், கொள்ளை என்று ஏமாற்றுகிறது தமிழ் சினிமா.

நடித்து, நடித்து ஊரை ஏமாற்றின கூட்டம் மேலும் மக்களை ஏமாற்ற அவர்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் அமைத்து தங்களது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போட்டிடுவாங்க. இவ்வாறு அரசியலுக்கு புகுந்த கூட்டங்கலால் தான் தமிழ் சமூகம் உய்வேற முடியாது இருக்கின்றது. இந்தியாவின் தமிழ் நாட்டில ஐந்து முறை கருணாநிதியும், மூன்றும் முறை ஜெயலலிதாவும் முதல் அமைச்சராக வந்துள்ள காரணத்தால் தான் தமிழ் நாடு ஏனைய மாநிலங்களை விட பின்னணியில் இருப்பதற்கும் இலங்கை தமிழ் மக்கள் முற்பது வருடங்கள் பின்தங்கி இருப்பதற்கும் காரணம். 


இந்தியாவின் வேறு எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது உலகின் எந்த ஒரு நாட்டிலோ சினிமா துறையை சேர்ந்த எவரும் அரசியல் நீரோட்டத்தில் இனைவது மிகவும் அரிதாகவே இருந்து வருகின்றது. அதனால் தான் ஏனைய நாடுகள் துரித பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்கின்றன. அனால் தமிழ் நாட்டிலோ 2ஜி ஸ்பெக்ட்ரம் இல் கோடி கணக்கில் அடித்து sun picturesல முதலீடு செய்யுறாங்கபா: அப்ப தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் பரப்பில வந்து மீன் பிடிக்கதான் செய்வார்கள். 

முகமாலையில் வைத்து தமிழ் மக்களின் பணத்தை வருவாய் பகுதி மூலம் கறந்த கூட்டம் பயங்கர வாதிகள் என்றால், பல கோடி தமிழ் நாட்டு மக்களின் பணத்தை நடிப்பாலும், அரசியலாலும் பிடுங்கும் கூட்டமும்  பயங்கர வாதிகள் தான்  


8 comments:

மைந்தன் சிவா said...

அப்புறம்???

நிருஜன் said...

தமிழ் சினிமா ஒழிக ஆரோக்கிய அரசியல் வாழ்க!

மதுரை சரவணன் said...

//அனால் தமிழ் நாட்டிலோ 2ஜி ஸ்பெக்ட்ரம் இல் கோடி கணக்கில் அடித்து sun picturesல முதலீடு செய்யுறாங்கபா: அப்ப தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் பரப்பில வந்து மீன் பிடிக்கதான் செய்வார்கள். //

அருமை.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
This comment has been removed by the author.
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

அனைத்துத் துறைகளையும் அலசி இருக்கும் விதம் சிறப்பு .பொதுவாக் தூரத்துக் கண்ணோட்டம் ஒரு சிறந்த படைப்பாளியை உருவாக்கும் என்பது இங்கு திண்ணம்

Anonymous said...

////"ஏமாறுபவன் இருக்கும் வரை எமாத்துபவனும் இருந்துகிட்டே தான் இருப்பான்". உலகிலே இருக்ககூடிய தமிழ் மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டுகின்ற துறைதான் தமிழ் சினிமா. முன்றாம் வகுப்பு பாசாகாத முட்டாள்கள் நடித்துவிட்டு கோடி கோடியா அள்றாங்க அதை பாத்திட்டு நம்மசனங்க கொட்டாவி விட்டு விட்டு வருதுங்க./// என் கொள்கைகளோடு ஒத்துப்போகும் ஒருவரை கண்டத்தில் மகிழ்ச்சி....

Anonymous said...

////அறிவாளிகளையும், கல்வி மான்களையும் அமைச்சரவையிலும் அரச நிர்வாக கருமங்களில் இணைத்ததன் காரணமாகதான் /// மேர்வின் சில்வா, நாமல் ராஜபச்ச, டக்லஸ் தேவானந்தா ...????

♔ம.தி.சுதா♔ said...

மிகவும் சிந்திக்க வைக்கும் ஆக்கம் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...